தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரனும் கொரோனா தொற்றால் பாதித்துள்ளார். வீடு மனைவி மக்கள், பாண்டி நாட்டு தங்கம், பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், சீனா தானா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் டி.பி.கஜேந்திரன். ‛‛சொக்கத்தங்கம், பேரழகன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், பாணா காத்தாடி, அம்பாசமுத்திரத்தில் அம்பானி'' உள்ளிட்ட ஏராளமான படங்களிலும் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார்.
சமீபகாலமாக உடல்நிலையை காரணம் காட்டி சினிமாவை விட்டு ஒதுங்கி உள்ளார். இந்நிலையில் மூச்சுத்திணறலால் பாதித்த இவர் வடபழனியில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்த போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு நோய் தொற்று லேசாக இருந்ததாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே வீடு திரும்பி உள்ள கஜேந்திரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛நான் நலமாக இருக்கிறேன். உங்களுடைய அன்புக்கு நன்றி. தொடர்ந்து பட வாய்ப்புகள் வரணும்'' என்று தெரிவித்துள்ளார்.