இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை |
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தனுஷ் நடித்து வரும் படம் வாத்தி. தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் பூஜையில் தனுஷ் - சம்யுக்தா மேனன் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது. ஆனால் அதையடுத்து வாத்தி படத்திலிருந்து சம்யுக்தா மேனன் விலகி விட்டதாக ஒரு செய்தி வைரலாகி வந்தது. அதோடு அவருக்கு பதிலாக வேறு நடிகையை படக்குழு பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது தனது சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதில் ‛வாத்தி / சார் என்னுடைய முதல் நாள்' என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் வாத்தி படப்பிடிப்பில் தற்போது சம்யுக்தா மேனன் கலந்து கொண்டு நடித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. அதோடு இந்த மாதம் இறுதிக்குள் வாத்தி படத்தின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதால் தற்போது தனுஷ் - சம்யுக்தா மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.