தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பஞ்சாப் மாநில சுற்று பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குறைபாடு குறித்து நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல், "பிரதமரின் பாதுகாப்பில் தவறு இருந்தால் அந்த நாடு பாதுகாப்பானதாக இருக்க முடியாது" என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த நடிகர் சித்தார்த், சாய்னாவின் பாலினம் குறித்து அவதூறான பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையை கேட்டுக் கொண்டது. இந்த விஷயம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிய நிலையில் நடிகர் சித்தார்த், சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டார். சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட சாய்னா, ‛அவரின் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும், ஒரு பெண்ணை இதுபோன்று குறிவைத்து தாக்கக் கூடாது. எனினும் அவர் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி. சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிப்பாராக,' எனக் கூறியிருந்தார்.
சித்தார்த்தின் இந்த மன்னிப்பு அறிக்கைக்கு பல்வேறு விதமான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் ‛இந்த அறிக்கை நன்றாக எழுதப்பட்டுள்ளது. பொது வெளியில் மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும்' என பாராட்டியிருந்தார். இதனை பார்த்த நடிகை கஸ்தூரி, ‛தைரியமா? எல்லாத் தரப்பிலிருந்தும் சீற்றம்தான் எழுந்துள்ளது' என குறிப்பிட்டு தன் பங்குக்கு தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார்.