அக்டோபர் முதல் பிக்பாஸ் சீசன் 9 : இந்தமுறை தொகுத்து வழங்குவது கமல்ஹாசனா? விஜய் சேதுபதியா? | ரூ.151 கோடியைக் கடந்த 'கூலி' முதல்நாள் வசூல் : லியோ சாதனை முறியடிப்பு | இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான் : கங்கை அமரன் பரபரப்பு பேச்சு | நடிகை கஸ்தூரி பா.ஜ.,வில் இணைந்தார் | ‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா |
2022ம் ஆண்டு பொங்கல் தினம் திரையுலகத்தைப் பொறுத்தவரை பெரும் சோகத்துடன்தான் ஆரம்பமாகியுள்ளது. முன்னணி நடிகர்களின் படங்கள் வரவில்லை என்றாலும் சில படங்கள் வெளியானதால் ஓரளவிற்கு வசூலைப் பார்க்கலாம் என தியேட்டர்காரர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால், பொங்கல் விடுமுறை நாட்களிலேயே வெளியான படங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் கூட மக்கள் வரவில்லை. சில படங்களுக்கான காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சில படங்களுக்கான காட்சிகள் குறைந்த அளவு ரசிகர்களுடன் நடைபெற்றன. இது தியேட்டர்காரர்களுக்கும், அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
இன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த வார சோகம் இந்த வாரமும் தொடர்கிறது. இன்று சென்னை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களில் காலை முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இன்றும் பல படங்களின் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
இன்றைய மற்ற காட்சிகளுக்கான முன்பதிவு இணையதளங்களில் சென்று பார்த்தால் பல தியேட்டர்களில் ஒரு டிக்கெட் கூட முன்பதிவு செய்யப்படவில்லை. சில தியேட்டர்களில் ஒற்றை இலக்கத்தில்தான் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொங்கலுக்கு வெளியான, “கார்பன், என்ன சொல்லப் போகிறாய், கொம்பு வச்ச சிங்கம்டா, நாய் சேகர், தேள்” ஆகிய படங்களில் ஒரு படம் கூட அனைத்து ரசிகர்களுக்குமான படமாக இல்லாமல் மக்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைக்கத் தவறிவிட்டது.