இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மட்டும் பிக்பாஸ் சீசனின் 1-4 வரை பங்குபெற்ற உங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் அல்டிமேட்டில் மீண்டும் வரவுள்ளனர்
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 முடிவடைந்த நிலையில் இந்த வருடம் ஒரு மிகப்பெரிய செய்தி காத்திருக்கிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழின் முதல் பிரத்தியேக ஓடிடி சீசனை ஜனவரி 30 முதல் தொடங்க உள்ளது. 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் பெரிய ஓடிடி அறிமுகத்துடன் பிக் பாஸின் ஐந்து புகழ்பெற்ற சீசன்களை டிவியில் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் அல்டிமேட்டைத் தொகுத்து வழங்குவதைக் காணலாம், இதை ரசிகர்கள் தளத்தில் பிரத்தியேகமாகப் பார்க்கலாம்.
ஓடிடி கடந்த பிக்பாஸ் சீசன்களில் மிகவும் பிரபலமான சில போட்டியாளர்களை மீண்டும் ஒன்றிணைக்கவுள்ளது. அவர்கள் விரும்பப்படும் பட்டத்தைப் பெறுவதற்கும், பார்வையாளர்களின் அன்பை வெல்வதற்கும், தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கும் இரண்டாவது வாய்ப்பை வழங்கும். இந்த புதுமையில் அனைவரையும் திகைப்படயச் செய்வது அதன் 24 மணிநேர ஒளிபரப்பாகும். இதன் மூலம் ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டில் நாள் முழுவதும் என்ன நடக்கிறது என்பதைக் காணலாம். இந்த அனுபவமானது பார்வையாளர்களை கவரும்.
கமல் கூறுகையில் “பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் ஓடிடி பதிப்பு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் உள்ளது. ஓடிடி பதிப்பையும் தொகுத்து வழங்குவதன் மூலம் தொடர்ந்து உங்களுடன் தொடர்பில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த புதிய வடிவத்தை இப்போது 24/7 நேரமும் காணலாம். இந்த புதிய அனுபவம் உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டுவதாகவும் சுவாரஸ்யமானதாகும் இருக்குமென நான் 100% நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்றார்.
ஜனவரி 30 முதல் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள உலகின் முதல் பிக்பாஸ் அல்டிமேட்டை கண்டு மகிழுங்கள்