கலையும் கருணையும்... அருண்மொழி தேவன் | நடிப்பு, பாட்மின்டன் ஸ்ரீசுவேதா-வின் விருப்பங்கள் | காதோடு தான் பேசுவேன்...! குரலுக்கு ஒரு கோபிகா | ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்த அபிஷன் ஜீவிந்த் | காமெடி நடிகராக மாறிய திரிஷ்யம் வில்லன் நடிகர் | வில்லன் நடிகருக்கு ஊக்கமளித்து பதிவிட்ட அவரது பள்ளி ஆசிரியை | 'முத்த மழை' வீடியோ வெளியான பின்பும் சர்ச்சை | நானியின் ‛தி பாரடைஸ்' படப்பிடிப்பு தாமதமாவது ஏன்? | நான் வாழ்ந்து வளர்ந்த இடத்தில் விமான விபத்து நடந்தது வேதனை அளிக்கிறது : உன்னி முகுந்தன் | தமிழுக்கு வரும் நரிவேட்ட ஹீரோயின் |
தமிழ்த் திரையுலகத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு பிரிவுக் செய்தியை தனுஷ், ஐஸ்வர்யா நேற்று அறிவித்தனர். திரையுலகத்தினருக்கும், அவர்களது ரசிகர்களுக்கும் இந்தப் பிரிவு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா என்பதால் அவருக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒரு சில ரசிகர்கள் தனுஷ் பற்றியும் விமர்சித்து கருத்துக்களைப் பதிவிட்டது, தனுஷ் ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது. அதனால், பதிலுக்கு அவர்களும் கருத்துக்களைப் பதிவிட காலை முதலே இருவரது ரசிகர்களுக்கும் இடையில் கருத்து மோதல் நிலவி வருகிறது.
தற்போது தனுஷ் ரசிகர்கள் 'We are with u Dhanush Anna, We Love Dhanush” என சில ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அது போல ரஜினி ரசிகர்கள் 'Thalaiva” என ரஜினிக்கு ஆதரவாக ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.
ரஜினிகாந்த், தனுஷ் இருவருமே இது தங்களது குடும்பப் பிரச்சினை, ரசிகர்கள் யாரும் தலையிட வேண்டாம் என்று அறிவுறுத்தினால் மட்டுமே ரசிகர்கள் சண்டையிடுவதை நிறுத்துவார்கள்.