இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
இளையராஜாவின் திரையிசை வரலாற்றில் இன்னொரு சாதனை நிகழ இருக்கிறது. உலகத்திலேயே எடை குறைவான சாட்டிலைட் தயாரிக்கும் தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவர்கள் குழு இந்த ஆண்டு இன்னும் அதிக எடையை குறைத்து ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்திருக்கிறது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இசையமைத்துள்ள பாடல் இடம்பெற்றுள்ள சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்ப இந்த மாணவர்கள் குழு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இளையராஜாவுடன் நீண்ட காலமாக பயணித்து வரும் ஸ்ரீராம் நமது நாளிதழக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், ‛இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுமையான முயற்சியாக மாணவர்கள் குழு வடிவமைத்துள்ள சாட்டிலைட்டில் இளையராஜாவின் பாடலை ஒலிக்க செய்ய உள்ளனர். இதற்காக பிரதமர் மோடியுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. கடந்த 75 ஆண்டுகள் நிகழ்ந்த இந்தியாவின் புதுமைகளையும், இனிவரும் காலங்களில் இந்த பாரதம் நம்பர் ஒன் தேசமாக இருக்கும் என்பதையும் உள்ளடக்கிய பாடலை இளையராஜா இசையமைத்துள்ளார். சுவானந்த் கிர்கிரே எழுதிய ஹிந்தி பாடலாக இது உருவாகியுள்ளது. இதனை தமிழிலும் இளையராஜா இசையமைக்க விரும்புகிறார்,' என்றார்.
இதனையடுத்து இளையராஜாவின் பாடல் விரைவில் விண்வெளியில் ஒலிக்க போகிறது. இதற்காக அவர் பணம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல், நாட்டிற்காக தனது பங்களிப்பாக இருக்கட்டும் என இசையமைத்து கொடுத்துள்ளார்.