தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கிட்டத்தட்ட 18 வருடங்களாக நட்சத்திர தம்பதிகளாக வலம்வந்த தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களது பிரிவு குறித்த தகவலை வெளியிட்டிருந்தனர். இத்தனைக்கும் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக அரசல் புரசலாக கூட சமீபத்தில் செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. அதனாலேயே இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களையும் திரையுலகை சேர்ந்தவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் விசாகன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் தனது சகோதரி ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷுடனான பிரிவு செய்தியை வெளியிட்ட கொஞ்ச நேரத்திலேயே, சமூக வலைதளப் பக்கத்தில் தனது புரொபைல் படத்தை மாற்றிவிட்டார்.
தனது சகோதரிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தானும் ஐஸ்வர்யாவும் சிறு குழந்தைகளாக இருந்தபோது தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது புரொபைல் பிக்சராக மாற்றி வைத்துள்ளார்.