ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

சமீபத்தில் மலையாளத்தில் சூப்பர்மேன் கதையம்சம் கொண்ட மின்னல் முரளி என்கிற படம் வெளியானது. டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகிய இருவருமே இந்த சூப்பர்மேன் பவர் கொண்ட நபர்களாக மின்னல் முரளி(கள்) கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒரு டீ மாஸ்டரும் ஒரு டெய்லரும் சூப்பர்மேன் பவர் பெற்றால் எப்படி இருக்கும் என்கிற வித்தியாசமான கற்பனையில் இந்த படத்தை இயக்குனர் பஷில் ஜோசப் இயக்கி இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது இந்தப் படத்தின் டிரைலரில் பயன்படுத்தி இருந்த பின்னணி இசையை ஏன் படத்தில் பயன்படுத்தவில்லை என்கிற கேள்விக்கு பதில் அளித்த பஷில் ஜோசப், “ஒரே படத்தில் அனைத்தையும் பயன்படுத்தி விட முடியாது.. ஒருவேளை இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருந்தால், அதில் நிச்சயமாக இந்த விடுபட்டுப்போன பின்னணி இசையை பயன்படுத்துவோம்” என கூறினார்.
அப்படியானால் மின்னல் முரளி இரண்டாம் பாகம் உருவாகுமா என்கிற கேள்விக்கு, “இரண்டாம் பாகத்திற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என ஆய்வு செய்து வருகிறேன். அப்படி இருந்தால் நிச்சயமாக இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.