துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பிரபல கன்னட நடிகை ஷூப்ரா அய்யப்பா. பரத்தினிதி என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானர் அதன்பிறகு தமிழில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த சகாப்தம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு சொந்த மொழியான கன்னடத்தில் வஜ்ரகயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தற்பேது திம்மையா அண்ட் திம்மையா, ரமண அவதாரா படங்களில் நடித்து வருகிறார்.
ஷூப்ரா அய்யப்பா பெங்களூருவைச் சேர்ந்த இளம் தொழில் அதிபர் விஷால் சிவப்பாவை காதலித்து வருவதாக கூறப்பட்டது. அவருடன்தான் வாழ்ந்து வருகிறார் என்றும் சொன்னார்கள். இந்த நிலையில் எங்களுக்கு நிச்சயதார்த்தமே முடிந்து விட்டது என்று கூறியிருக்கிறார் ஷூப்ரா அய்யப்பா. இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லலாம் என்றுதான் விஷால் என்னை அழைத்துச் சென்றார். அங்கு அவர் பல சிறப்பான ஏற்பாடுகளை செய்து வைத்து இரவு விருந்தின்போது மெழுகுவர்த்தி வெளிச்சத்தின் பின்னணியில் என் முன் மண்டியிட்டு எனக்கு மோதிரம் அணிவித்து தன் காதலை புரபோஸ் செய்து என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று கேட்டார். அந்த தருணத்தை நான் எதிர்பார்க்கவில்லை. வானத்தில் பறப்பது மாதிரி இருந்தது. இப்போது எங்களுக்குள் நிச்சயதார்த்தம் நடந்து விட்டது.
விஷாலும் நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பரின் நிகழ்ச்சியில் சந்தித்தோம். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் அறிந்தோம், மற்றவர் மீது ஆர்வத்தை வெளிப்படுத்தினோம். இறுதியில், ஒரு உறவினர் எங்களை சரியாக அறிமுகப்படுத்தினார். நாங்கள் டேட்டிங் செய்ய ஆரம்பித்தோம், இதோ, எங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராக இருக்கிறோம்.
கொரோனா நிலைமை சரியாகும் வரை காத்திருக்க முடிவு செய்திருக்கிறோம். எங்களுக்கு வெளிநாட்டில் நிறைய நண்பர்கள் உள்ளனர், எல்லோரும் எங்களுடன் அந்த மங்கல நாளில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது ஒரு பெரிய கொண்டாட்டமாக இருக்கும். என்கிறார்.