மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ரஜினி மகள் ஐஸ்வர்யா 18 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த தனுஷை திருமணம் செய்து கொண்டார். இப்போது கணவன் மனைவி இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு விட்டார்கள்.
விவாவகரத்து பரபரப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இருவருமே அவரவர் பணியில் பிசியாக இருக்கிறார்கள். தனுஷ் பாலிவுட் மற்றும் தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே '3' மற்றும் 'வை ராஜா வை' படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தற்போது ஒரு காதல் இசை ஆல்பத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்
இதற்காக தனது குழுவினருடன் ஐதராபாத்தில் தங்கி உள்ள ஐஸ்வர்யா அங்குள்ள 7 நட்சத்திர ஒட்டலில் தனது குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் படங்கள் வெளியாகி உள்ளது. வாத்தி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தனுஷூம் ஐதராபாத்தில் தான் உள்ளார். இருவருமே ஒரே ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.