பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த தெலுங்குப் படம் 'புஷ்பா'. இப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தமிழில் நேரடிப் படங்களுக்கு இணையாக வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது. இங்கு மட்டும் 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
ஹிந்தியில் பெரிய அளவில் படத்தை விளம்பரப்படுத்தவில்லை என்றாலும் வேறு நேரடி ஹிந்திப் படம் எதுவும் போட்டிக்கு இல்லாத காரணத்தால் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. அல்லு அர்ஜுனின் படங்களை யு டியுபில் மட்டும் அதிகம் பார்த்த ரசிகர்களுக்கு தியேட்டர்களில் 'புஷ்பா' படத்தைப் பார்க்க ஆர்வமாக இருந்தது.
அதனால் நல்ல வசூலைப் பெற்ற இப்படத்தின் வசூல் தற்போது 95 கோடியைத் தொட்டுவிட்டதாம். விரைவில் 100 கோடி சாதனையைப் படைத்துவிடும் என்கிறார்கள். அல்லு அர்ஜுனின் திரையுலகப் பயணத்தில் இது ஒரு முக்கிய சாதனையாக அமையும்.