துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பெங்களூரில் பிறந்து வளர்ந்த கேரளத்து பொண்ணு இஷாரா நாயர். தமிழில் வெண்மேகம், பப்பாளி படங்களில் நடித்தாலும் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் கவனிக்கப்பட்டார். அதன்பிறகு பப்பரப்பம், இவன் யாரென்று தெரிகிறதா? எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா படங்களில் நடித்தார். அந்த படங்கள் எதுவும் அவருக்கு குறிப்பிடும்படி அமையவில்லை.
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். பி.ஈ பார் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். காவல் துறை உங்கள் நண்பன் படத்தில் நடித்த சுரேஷ் ரவி ஹீரோ. மற்றும் தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், கல்லூரி வினோத், மது, ரேணுகா உள்பட பலர் நடிக்கிறார்கள். காவல்துறை உங்கள் நண்பன் படத்தை இயக்கிய ஆர்டிஎம் இயக்குகிறார். பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் அரியரை கிளியர் செய்ய படும்பாடுகளை பற்றிய காமெடி படம்.