தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் | 50 ஆண்டு சினிமா பயணம் : ரஜினிக்கு அந்த ஒரு ஏக்கம் மட்டுமே...! | ராம் சரணின் அலைப்பேசி எண்ணை அவர் மனைவி எப்படி பதிந்து வைத்துள்ளார் தெரியுமா? |
கொரோனா பரவல் இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக வந்த போது ஓடிடி தளங்களில் புதிய படங்களை நேரடியாக வெளியிடுவதும் ஆரம்பமாகி அதிகமானது. முன்னணி நடிகர்கள் சிலரும் ஓடிடி பக்கம் வந்தது தியேட்டர்காரர்களை கோபமடைய வைத்தது.
சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படம் 2020ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான போது அதற்கு தியேட்டர்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். படம் வெளியான 2020 நவம்பர் மாதத்தில் கொரானோ முதல் அலைக்குப் பிறகு தியேட்டர்களைத் திறந்தனர். அப்போது இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் நல்ல வசூலையும், லாபத்தையும் கொடுத்திருக்கும். அதை இழந்த வருத்தம் தியேட்டர்காரர்களிடம் அதிகம் இருந்தது.
அதற்குப் பிறகு புதிய படங்கள் வெளியான நான்கு வாரங்களில் ஓடிடியில் படங்களை வெளியிடலாம் என பேச்சு வார்த்தை மூலம் முடிவு செய்தனர். ஓடிடி வெளியீடுகளும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது. கடந்த வருடம் சூர்யா நடித்த 'ஜெய் பீம்' படமும் ஓடிடியில்தான் வெளியானது. இப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. சூர்யா நடித்த இரண்டு படங்கள் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அவை தியேட்டர்களில் வந்திருந்தால் தியேட்டர்காரர்களுக்கு லாபமாகத்தான் அமைந்திருக்கும்.
2019ல் வெளிவந்த 'காப்பான்' படத்திற்குப் பிறகு சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படம்தான் தியேட்டர்களில் வெளியாகப் போகிறது. இரண்டு ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகும், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு சூர்யா ரசிகர்கள் இப்படத்தைத் தியேட்டர்களில் காண காத்திருக்கின்றனர்.