சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் | பிளாஷ்பேக்: திரைப்படக் கல்லூரி மாணவர்கள் திரையில் ஏற்படுத்திய புரட்சி “ஊமை விழிகள்” |
கிராபிக் நாவலான அதர்வா - தி ஆரிஜின் என்ற நாவலில், இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி சூப்பர் ஹீரோவாக தோன்றுகிறார். இந்த நாவல், தோனியின் முதல் பேண்டஸி பிக்சன் ஆகும். தோனியின் முதல் போஸ்டரை நேற்று வெளியிட்டுள்ளனர். கதையை ரமேஷ் தமிழ் மணி எழுதியுள்ளார். இதற்காக, 150 க்கும் மேற்பட்ட வண்ணப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நாவல் குறித்த தோனி கூறியதாவது: இந்த பிரம்மாண்டமான புதிய முயற்சியில் நானும் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இது உண்மையிலேயே ஒரு அற்புதமான முயற்சியாகும். அதர்வா - தி ஆரிஜின் ஒரு ஈர்க்கும் கதையும் மற்றும் அதி அற்புதமான கலைத்தன்மையும் கொண்ட வசீகரிக்கும் கிராபிக் நாவல்.
எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் தொலைநோக்குப் பார்வையில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன், சமகாலத்திய தொடர்புடன் இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் அவரது ஐடியாவை கேட்டவுடனே, சம்மதித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நாவலின் வெற்றியை தொடர்ந்து இதைப்படமாக எடுக்கும் முயற்சியும் உருவாகலாம் என தெரிகிறது.