‛எக்ஸ்க்ளூசிவ்' போட்டும் இறங்கிப் போன 'வார் 2' | அமெரிக்காவில் 6 மில்லியன் வசூலித்த 'கூலி' | அரசு பேருந்து ஓட்டி தொகுதி மக்களை குஷிப்படுத்திய பாலகிருஷ்ணா | பெண்கள் பொறுப்பு குறித்த சர்ச்சை பேச்சால் கண்டனத்துக்கு ஆளான விக்ரம் பட வில்லன் | சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியானது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம். இன்றுடன் இப்படம் வெளிவந்து 75 நாட்கள் ஆகிறது. சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் மாலைக் காட்சியாக இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்று படம் 75வது நாளைக் கொண்டாடுவது மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான். கடந்த சில வருடங்களாக வசூல் ரீதியாக வரவேற்பைப் பெறும் படங்கள் கூட 50 நாட்களைக் கடந்து ஓடுவது பெரிய விஷயமாகவே இருக்கிறது. இருப்பினும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த கொண்டாட்டத்துக்கிடையேயும் வருத்தமான பதிவு ஒன்றை சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “75 நாட்கள் ஆகியும் இன்னமும் வினியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கவில்லை. ஒரு வெற்றிப்படத்திற்கே இந்த நிலைன்னா…மற்ற படங்களின் நிலையை என்ன சொல்ல??! இப்படி இருந்தால் எப்படி தொழில் செய்ய??!, நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் போறதுல என்ன தப்பு இருக்குன்னு யோசிக்க வைக்குறாங்க..,” என்று பதிவிட்டுள்ளார்.
சிம்புவுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது இந்தப் படம். ஆனால், படத்தின் தயாரிப்பாளருக்கும், சிம்புவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.