விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" |

கொரோனா ஒமிக்ரான் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என கடந்த ஜனவரி மாதத் துவக்கத்திலிருந்தே அமல்படுத்தப்பட்டது. கடந்த வாரங்களில் தியேட்டர்களில் வெளிவந்த படங்கள் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நேற்று வெளியான படங்களின் நிலை என்ன என்பது இன்றும், நாளையும் தான் தெரியும்.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. பிப்ரவரி 15ம் தேதி வரை மட்டுமே ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. பிப்ரவரி 16ம் தேதி முதலான தளர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்த ஆலோசனைகளை இன்று(பிப்., 12) காலை மேற்கொண்டார். இந்நிலையில் மார்ச் 2ம் தேதி வரை ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகளுடன் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தியேட்டர்களுக்கு 100 சதவீத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மார்ச் 16 முதல் 100 சதவீதம் இருக்கைகளுடன் தியேட்டர்கள் இனி தமிழகத்தில் இயங்கும்.
அஜித் நடித்துள்ள 'வலிமை' படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாக உள்ளது. இதன்மூலம் இந்தப்படம் 100 சதவீத இருக்கைகளுடன் வெளியாக உள்ளது.