தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

பசங்க படத்தின் மூலம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றவர் ஸ்ரீராம். அதன்பிறகு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் கோலி சோடா, வஜ்ரம், கமர்கட்டு, பாபநாசம், அடுத்த சாட்டை படத்தில் விடலை பையனாக நடித்தார். பைசா உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்தார்.
இந்த நிலையில் எக்ஸிட் என்ற மலையாள படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஒருவர் நடிக்கிறார். ப்ளூம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் வேணு கோபாலகிருஷ்ணன் தயாரிக்கிறார். புதுமுக இயக்குநர் ஷாகீன் இயக்கி வருகிறார். கடந்த ஜனவரி 15 ஆம்தேதி முதல் கேரளாவின் குட்டிக்கணம் மலைப்பகுதியிலும், பாலக்காட்டிலும் தொடர்ந்து இரவு பகலாகப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
மலையாள சினிமாவில் துணை இயக்குனராக பல படங்களில் பணியாற்றியவர் ஸ்ரீராமின் தந்தை. இதனால் ஸ்ரீராம் சரளமாக மலையாளம் பேசுவார். முதல் படத்திலேயே ஹீரோவாகியிருக்கும் ஸ்ரீராம் மலையாளத்தில் சாதிப்பாரா என்பது படம் வெளிவந்த பிறகு தெரியும்.