பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
அஜித்தின் வலிமை படம் பிப்., 24ல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தை அடுத்து மீண்டும் இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் 3வது முறையாக அஜித் இணைகிறார். அஜித்தின் 61வது படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு அடுத்தமாதம் துவங்குகிறது. தற்போது இந்த படத்திற்கான பணிகள் துவங்கி உள்ளன. குறிப்பாக சென்னை மவுண்ட் ரோடு போன்று செட் அமைக்கும் பணிகள் மும்முரமாய் நடந்து வருகின்றன.
இந்நிலையில் அஜித் 61 படம் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். போனி கபூர் அதில் அஜித்தின் 61வது படத்திற்கான லுக் நெகட்டிவ் போட்டோவாக வெளியிடப்பட்டு, AK61 படத்திற்கான ஆயத்தம் என போனி கபூர் அறிவித்துள்ளார். இந்த போட்டோவில் அஜித் தாடியுடன் உள்ளார்.
அதேசமயம் சென்னையில் ஒரு நிகழ்வில் அஜித் பங்கேற்ற போட்டோ ஒன்று காலை முதல் சமூகவலைதளங்களில் வைரலானது. அந்த போட்டோவில் அஜித் நீண்ட தாடி உடன் காணப்பட்டார். இப்போது போனி கபூரும் அது மாதிரியான ஒரு போட்டோவையே வெளியிட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது நேர்கொண்ட பார்வை படத்தில் வருவது போன்று தாடி உடன் படத்தில் வருவார் என தெரிகிறது. அதேசமயம் இந்த தாடி லுக் ஸ்டைலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.