தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிரபல மலையாள நடிகை காவேரி. தென்னிந்திய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் அப்பு, பெண்ணின் மனதை தொட்டு, நினைக்காத நேரமில்லை, காசி, புன்னகை பூவே, கண்ணாடி பூக்கள், கண்ணுக்குள் நிலவு, , சமுத்திரம் குட்டி பிசாசு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு இயக்குனர் சூர்ய கிரனை திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது அவரை விட்டு பிரிந்து விட்டார்.
இந்த நிலையில் காவேரி இயக்குனராகி இருக்கிறார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். இன்னும் டைட்டில் வைக்காத இந்த படத்தில் சேத்தன் ஹீரோவாக நடிக்கிறார். சுகாசினி மணிரத்னம், சித்தி இட்னானி, ஸ்வேதா, ரோஹித் முரளி உள்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவை ஆல்பி ஆன்டனி மற்றும் சக்தி சரவணன் கையாள, அச்சு ராஜாமணி படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படம் காதல் மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை மையமாக கொண்டது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சேத்தன் நிர்வாணமாக இருக்கும் போட்டோ இடம் பெற்றுள்ளது. பெண் இயக்குனரின் படத்தில் ஆணின் நிர்வாணகாட்சி இடம் பெற்றிருப்பது குறித்து பலருக்கு ஆச்சர்யம் ஏற்பட்டுள்ளது.