மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இரட்டை வேடங்களில் நடிக்கும் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் ராம் சரணுக்கு வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மாநாடு திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ். ஜே சூர்யா மிரட்டி இருந்தார். அதன்மூலம் இந்த பட வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.