துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சமந்தா நடிக்கும் தெலுங்கு படம் யசோதா. தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளது. இந்த படப்பிடிப்புக்காக 3 கோடி ரூபாய் செலவில் 7 நட்சத்திர ஓட்டல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் கூறியதாவது: படத்தின் 30 முதல் 40 சதவிகத காட்சிகள் ஒரு நட்சத்திர ஹோட்டலில்தான் நடக்கிறது. இதற்காக நாங்கள் பல நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்றோம், ஆனால் இதுபோன்ற ஹோட்டல்களில் 35, 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே, கலை இயக்குனர் அசோக்கின் மேற்பார்வையில் ராமாநாயுடு ஸ்டுடியோவில் 3 கோடி செலவில் 2 மாடிகள் கொண்ட பிரமாண்ட அரங்கம் ஒன்றை அமைத்திருக்கிறோம். இதில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. என்றார்.