மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நடன இயக்குனர் ராபர்ட், சில படங்களில் வில்லனாக நடித்தார். அதன்பிற எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு படங்களில் நடிக்காமல் நடனம் மட்டும் அமைத்து வந்தார். தற்போது டிங் டாங் என்ற படத்தில் காமெடியனாக நடிக்கிறார். இப்படத்தை நடன இயக்குநரும் ராபர்ட்டின் சகோதரருமான ஜே.எம். இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.விஜய் வல்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: சஸ்பென்ஸ் திரில்லர் ரகமாக இருக்கும் இந்தப் படம், பல்வேறு வணிக அம்சங்களுடன் நகைச்சுவையும் கலந்து உருவாகிறது. இந்தப் படத்தில் நான்கு கதாநாயகர்களும் நான்கு கதாநாயகிகளும் நடிக்கிறார்கள். அவர்கள் தென்னிந்திய மொழிகளில் பிரபலமான முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் நடன இயக்குநர் ராபர்ட் முக்கியமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு இது புதிய நடிப்பு அனுபவமாக இருக்கும். என்றார்.