5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
மலையாளத்தில் பிஜுமேனன், பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'அய்யப்பனும் கோஷியும்' படம் தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வரும் பிப்-25ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. சாகார் சந்திரா இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இதில் பவன் கல்யாண் ஜோடியாக நித்யா மேனன் மற்றும் ராணா ஜோடியாக சம்யுக்தா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி ராணாவின் தந்தையாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ராணா, தெலுங்கில் உள்ள அனைத்து நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் ஆசை.. ஆனால் அதில் பவன் கல்யாண் மட்டும் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.. இனி அடுத்தடுத்து வரும் எனது படங்களில் பவன் கல்யாணின் தாக்கம் நிச்சயமாக இருக்கும். ஐதராபாத்தை இந்தியாவின் சினிமா தலைநகரமாக்க வேண்டும் என விரும்புகிறேன்.. அதற்கான கடின உழைப்பையும் தர தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்...