துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
திரையுலகில் ஒரு முன்னணி நடிகரின் படம் வெளியானால் அது எந்த மொழியாக இருந்தாலும் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதைத்தான் பலரும் எதிர்பார்ப்பார்கள். தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே 'ஓபனிங் ஆக்டர்' என்று அழைக்கப்படுபவர் அஜித். அவர் நடித்து வெளிவரும் படங்களுக்கான ஓபனிங் பிரமாதமாக இருக்கும். அதன் பிறகு படத்தின் தரத்தைப் பொறுத்தே அவருடைய படங்களுக்கான வசூல் இருக்கும்.
கடந்த சில வருடங்களில் அஜித் நடித்து வெளிவந்த படங்களில் 'வேதாளம், விஸ்வாசம்' ஆகிய படங்கள் முதல் நாள் வசூலிலும், அதைத் தொடர்த் வசூலிலும் சிறப்பாக அமைந்து படத்தை வாங்கியவர்களுக்கு பெரும் லாபத்தைக் கொடுத்தது.
அஜித் நடித்து கடைசியாக 2019ல் வெளிவந்த 'நேர்கொண்ட பார்வை' ஒரு கமர்ஷியல் படமாக அமையவில்லை. அதன் வசூல் குறைவாகத்தான் இருந்தது. இருப்பினும் அவர் அப்படத்தை இயக்கி வினோத்துடன் மீண்டும் 'வலிமை' படம் மூலம் இணைந்தார். இப்படம் வெளிவருவதற்குள்ளாக பல முறை 'வலிமை அப்டேட், வலிமை அப்டேட்' என பல இடங்களில் பேச வைத்தது. அந்த அப்டேட் கேட்ட அளவிற்கு படம் ரசிகர்களை எந்த அளவிற்குத் திருப்திப்படுத்தியிருக்கிறது என்ற ஒரிஜனல் அப்டேட் திங்கள் கிழமைதான் தெரியும்.
நேற்றும், இன்றும், நாளையும், நாளை மறுநாளும் இப்படத்திற்கான பெரும்பாலான தியேட்டர்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. படம் வெளியான நேற்றைய தினம் அதிகாலை சிறப்புக் காட்சிகள் பல தியேட்டர்களில் நடைபெற்றது. அதற்குப் பின் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் கூட சிறப்புக் காட்சிகள் காலை 9 மணிக்கு நடைபெற்றது. நேற்றைய தினம் மட்டும் தமிழகத்தில் இப்படம் சுமார் 35 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் சேர்த்து 15 கோடியுடன் மொத்த வசூலாக 50 கோடி வரை இருந்திருக்கலாம் என்கிறார்கள்.
படத் தயாரிப்பு நிறுவனம் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் வரை விதவிதமான முதல் வசூல் விவரங்கள் பல தரப்பிலிருந்தும் வெளிவரலாம்.