பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் வைத்திருக்கும் நடிகர்களில் அஜித், விஜய் முதன்மையாக இருக்கிறார்கள். இருவரது படங்களின் முதல் பார்வை, டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகும் போதும், படங்கள் வெளியாகும் போதும் ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது டிரெண்டிங்கில் விடுவது இருவரது ரசிகர்களின் வழக்கம்.
நேற்று அஜித் நடித்த 'வலிமை' படம் உலகம் முழுவதும் வெளியானது. அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி மகிழ, விஜய் ரசிகர்களோ படத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைப் பரப்பி வந்தனர். நேற்று வலைதளத்தில் 'ValimaiDisaster' என்று படத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் விஜய் ரசிகர்கள் டிரெண்டிங் வர வைத்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று 'ValimaBlockbuster. Ajithkumar' ஆகியவற்றை டிரென்டிங்கில் வரவைத்தனர் அஜித் ரசிகர்கள். மேலும், விஜய் ரசிகர்களின் எதிர்ப்புகளை சமாளிக்க படத்தில் எதிரிகளைப் பற்றி அஜித் பேசும் வசனமான, “நம்மள பிடிக்காதவங்க கல்லு எறிஞ்சிட்டு தான் இருப்பாங்க, அதுக்கெல்லாம் நாம பதில் சொல்லிட்டு இருக்க கூடாது. எறியுற கல்ல கேட்ச் பிடிச்சி கோட்டைய கட்டி அது மேல கால் மேல கால் போட்டுட்டு உட்காரனும்…”, “எனக்கு எதிரியா இருக்கிறது அவ்வளவு சுலபம் அல்ல...'' உள்ளிட்ட சில வசனங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.