மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி |
இளையராஜாவின் தீவிர ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு திரைப்படம் 'பயணங்கள் முடிவதில்லை'. ஒரு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பாடல்கள் எந்த அளவு உறுதுணையாக இருக்கும் என்பதை உணர்த்திய மற்றுமொரு திரைப்படம்.
இந்தப் படத்தைப் பற்றி எழுதும் போது முதலில் இளையராஜாவின் இசையைப் பற்றியும், சூப்பர் ஹிட்டான பாடல்களைப் பற்றியும், அவற்றை எழுதிய முத்துலிங்கம், கங்கை அமரன், வைரமுத்து ஆகியோரையும், பாடல்களைப் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி ஆகியோரையும் குறிப்பிட வேண்டும். இப்படத்தின் பாடல்களான ''இளைய நிலா பொழிகிறதே, மணியோசை கேட்டு, சாலையோரம், ராக தீபம், தோகை இளமயில், வைகறையில், ஏ ஆத்தா,” ஆகிய ஏழு பாடல்களுமே ஏழிசையாக ஒலித்து படத்தை ரசிகர்களிடம் ஏற்ற வைத்தது.
கோவைத்தம்பி தயாரிப்பில், ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில், மோகன், பூர்ணிமா ஜெயராம், எஸ்.வி.சேகர், கவுண்டமணி மற்றும் பலர் நடிப்பில் 1982ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி வெளியானது இந்தப் படம். சில தியேட்டர்களில் தொடர்ந்து ஒரு வருடம் ஓடி சாதனை படைத்த ஒரு திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றோடு 40 ஆண்டுகள் ஆகிறது.
நன்றாக பாடத் தெரிந்த வறுமை நிலையில் இருக்கும் இளைஞர் மோகன். அவரது பாடும் திறமையைப் பார்த்து வியந்து அவரை சினிமாவில் பாட வைத்து பெரிய பாடகராக்குகிறார் பூர்ணிமா ஜெயராம். கூடவே அவருக்குக் காதலும் வருகிறது. இருவரும் காதலர்களாகிறார்கள். ஆனால், திடீரென தனது காதலி பூர்ணிமாவை விட்டு விலகி, தன்னை அவர் வெறுக்கும் அளவுக்கும் செய்கிறார். ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு வாழ்க்கை முடியும் தருவாயில் தனது நிலைமை காதலிக்குத் தெரியக் கூடாது. அவர் வேறு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் மோகன் செய்கிறார். படத்தின் முடிவு ரசிகர்களை மிகவும் நெகிழ வைத்து கண் கலங்க வைத்த ஒரு உணர்ச்சிகரமான காதல் காவியமாக இப்படம் அமைந்தது.
மோகன், பூர்ணிமா ஜெயராம் (இப்போது பூர்ணிமா பாக்யராஜ்) ஜோடி அந்தக் காலத்தில் சில பல சூப்பர் ஹிட்களைக் கொடுத்த ராசியான ஜோடியாக இருந்தது. நெகிழ்வான காதல் கதையிலும் 'இந்த சென்னை மாநகரத்திலே…' என கவுண்டமணியின் காமெடியும் அதிகம் ரசிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் மோகன் தோழனாக வரும் எஸ்.வி.சேகர், பூர்ணிமா தோழியாக வரும் ரஜினி ஆகியோரும் ரசிக்க வைத்தனர்.
ஒரு படத்தில் என்னவெல்லாம் இருந்தால் ரசிகர்களைக் கவர்ந்து பெரிய வெற்றியைப் பெற முடியும் என்பது இந்தக் கால இயக்குனர்களுக்கும் இப்படம் ஒரு பெரிய முன்னுதாரணம்.