இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? |
கொரோனா மூன்றாவது அலை தீவிரமாவது போல கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தோற்றம் ஏற்பட்டது.. ஆனால் இப்போது அதன் தாக்கம் குறைந்துவிட்டதால் அரசும் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்பிற்கு தற்போது கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக திரையுலக பிரபலங்கள் ஆளாகி வருகின்றன.
அந்தவகையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நடிகர் கமல் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி மீண்டுவந்த நிலையில் தற்போது அவரது மகள் நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்.
இதுகுறித்த தகவலை அவரே வெளியிட்டுள்ளதுடன், “நண்பர்களே.. விரைவான அதேசமயம் வேடிக்கையல்லாத ஒரு அப்டேட்.. எவ்வளவோ பாதுகாப்பு விஷயங்களை கடைபிடித்து வந்தபோதும் எனக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சையில் இருக்கிறேன். சீக்கிரமே குணமாகி திரும்பும் நாளுக்காக என்னால் காத்திருக்க முடியவில்லை” என கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன்...