தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
2015ல் வெளிவந்த 'டம்மி டப்பாசு' படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன் பிறகு வெளிவந்த 'ஜோக்கர்' படம் மூலம் யார் இவர் எனக் கேட்க வைத்தார். அதற்குப் பிறகு அவர் நடித்து 'ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' ஆகிய படங்கள் மட்டுமே வெளிவந்திருந்தாலும் முன்னணி நடிகைகள் அளவிற்கு பிரபலம் அடைந்தார்.
அதற்கு ஒரே காரணம் 2019ல் அவர் சேலை அணிந்து எடுத்து வெளியிட்ட ஒரு போட்டோ ஷுட். சேலையில் இந்த அளவிற்குக் கவர்ச்சி காட்ட முடியுமா என அந்த புகைப்படங்களைப் பார்த்தவர்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைய வைத்தார். அதன்பின் 'குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 4' ஆகியவற்றின் மூலம் இன்னமும் பிரபலமானார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா சமீபத்தில் மீண்டும் தன்னுடைய கிளாமர் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார். சில வாரங்களுக்கு முன்பு கருப்பு நிற சேலை அணிந்த போட்டோஸ் மற்றும் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட கிளாமர் போட்டோஸ் ஆகியவற்றைத் தொடர்ந்து இன்று சிவப்பு நிற ஆடை அணிந்த போட்டோ ஷுட் ஆகியவற்றின் மூலம் சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி மீண்டும் பேச வைத்துள்ளார்.