ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய 69வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் திரையுலத்தின் முக்கிய சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் சமூகவலைதளம் மூலம் வாழ்த்தியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர், மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், “மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க,” என பதிவிட்டுள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கூறுகையில், ‛‛இன்று பிறந்தநாள் காணும் இனிய நண்பரும், தமிழக முதல்வருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர் உடல் ஆரோக்கியத்துடன், எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்'' என்றார்.
மேலும், பல திரையுலகப் பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.