அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை |
மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான சாய்பல்லவி அதன்பிறகு மலையாளம், தமிழ் படங்களில் நடித்தாலும், தெலுங்கில் அவர் முன்னணி நடிகையாகவே மாறிவிட்டார். சரியான படங்களை தேர்வு செய்து நடித்துவரும் சாய்பல்லவிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் வட்டமும் தெலுங்கு திரையுலகில் உருவாகியுள்ளது. அது எந்த அளவிற்கு என்பதை நேற்று நடைபெற்ற ஆடவல்லு மீக்கு ஜோஹார்லு என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கண்கூடாக காண முடிந்தது.
கிஷோர் திருமலா இயக்கத்தில் சர்வானந்த், ராஷ்மிகா இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய்பல்லவி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் புஷ்பா பட இயக்குனர் சுகுமாரும் கலந்துகொண்டு பேசும்போது சாய்பல்லவியின் பெயரை குறிப்பிட்டு பேச ஆரம்பித்தார். அப்போது அரங்கில் இருந்த ரசிகர்கள் கரகோஷம் இயக்குனர் சுகுமாரை பேசவிடாமல் நீண்ட நேரம் ஸ்தம்பிக்கச் செய்தது.
மீண்டும் ஒரு வழியாக சுதாரித்து பேச ஆரம்பித்த இயக்குனர் சுகுமார், சாய்பல்லவி தெலுங்கு சினிமாவின் லேடி பவன் கல்யாண் ஆக மாறிவிட்டார் என்று சொல்ல, அருகில் நின்றிருந்த ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சக நடிகைகளும் அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்களும் கைதட்டி ஆரவாரக் கூச்சல் எழுப்பினார்கள்.
அதேபோல சாய்பல்லவி பேச ஆரம்பித்தபோதும் கூட, அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்த வழியே இருந்தனர் இதனால் உங்கள் அன்புக்கு நன்றி என்று மட்டும் சொல்லிவிட்டு தனது பேச்சை முடித்துக் கொண்டார் சாய்பல்லவி.
இந்த படத்தின் கதாநாயகி ராஷ்மிகா தான் என்றாலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக, படத்திற்கு சம்பந்தமே இல்லாத சாய்பல்லவி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நட்புக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஒரு மிகப் பெரிய முன்னுதாரணமாக அமைந்து விட்டது என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் இத்தகைய மாற்றம் எப்போது வருமோ