இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
தியேட்டர்களுக்கு வரும் படங்களுக்குத்தான் அதன் தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் பிரமோஷன்கள் செய்ய வேண்டுமென நினைப்பார்கள். முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்குத்தான் இப்போதெல்லாம் பிரமோஷன்கள் அதிகமாக இருக்கின்றன. மீடியம் பட்ஜெட், ஸ்மால் பட்ஜெட் படங்களை அதன் நடிகர்கள், நடிகைகள் கூட அதிகம் கண்டு கொள்வதில்லை.
இந்த சமூக வலைத்தள யுகத்திலும் அதில் செயல்படும் ரசிகர்களை ஈர்க்க படங்களுக்கான 'எமோஜி'க்களை வெளியிடுவது அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு 'மெர்சல், காலா, என்ஜிகே, பிகில், மாஸ்டர்' ஆகிய படங்களுக்கு சிறப்பு எமோஜிக்கள் வெளியிடப்பட்டன. கடந்த வருடம் வெளிவந்த ஓடிடி வெப் சீரிஸ் ஆன 'த பேமிலி மேன் 2'க்கு சினிமாவைப் போலவே எமோஜி வெளியிடப்பட்டது.
இப்போது ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கும் எமோஜிக்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்கள். கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ், மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாறன்' படம் ஓடிடி தளத்தில் மார்ச் 11ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்காக சிறப்பு எமோஜிக்கள் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று இப்படத்தின் டிரைலர் யு டியூபில் வெளியிடப்பட்டது. தற்போது வரை 3 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.