கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? |
துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஹே சினாமிகா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இன்று வெளியாகி உள்ளது. நடன இயக்குநர் பிருந்தா இயக்குநராக அறிமுகமாகிறார்.
படத்தில் பணிபுரிந்தது குறித்து நடிகை அதிதிராவ் கூறியதாவது: பிருந்தா மாஸ்டரை எனக்கு மிகவும் பிடிக்கும், அவருடன் பணியாற்றுவதை நான் மிகவும் விரும்புகிறேன். அவர் இயக்கும் முதல் படத்தில் நானும், துல்கரும் தான் நடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதற்கு முன் நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் இருந்து இது மிகவும் வித்தியாசமானது.
நானும் துல்கரும் இந்தப் படத்திற்கு முன்பே நண்பர்கள். ஒன்றாக பணியாற்றுவது எங்களுக்கு உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஹே சினாமிகா படத்தில் நான் இதுவரை நடித்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
ஒரு மனிதருக்குள் பல்வேறு சுபாவங்கள் உள்ளது. எனது வேடிக்கையான பக்கத்தை பற்றி எனக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அறிவார்கள். எனது இந்த பக்கத்தை எங்களது நடன ஒத்திகையின் போது பிருந்தா மாஸ்டர் கவனித்திருப்பார் என்று நினைக்கிறேன். அதனால் தான் இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்ததாக நினைக்கிறேன். எனது அந்த மறுபக்கத்தை இந்த படத்தில் காணலாம்.
ஒரு குறிப்பிட்ட வகை திரைப்படத்துடன் மட்டும் என்னை தொடர்பு படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லை என்றாலும், காதல் கதைகளில் நடிக்க விரும்புகிறேன். ஒரு காதல் கதையில் வித்தியாசமான பயணம் இருக்கும்போது, அது எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும். என்கிறார்.