23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
தெலுங்கு திரையுலகில் மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர் ஆக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். 40 வயதை தாண்டிய அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் கடத்தி வருகிறார். இன்னொரு பக்கம் இவருக்கும் அனுஷ்காவுக்கும் இடையே காதல் இருக்கிறது, அவரைத்தான் திருமணம் செய்ய போகிறார் என்று கூட அவ்வப்போது செய்திகள் பரபரப்பாக கிளம்பி அப்படியே அமுங்கி விடும்.
இந்த நிலையில் பிரபாஸ் நடிப்பில் அடுத்த வாரம் ராதே ஷ்யாம் என்கிற படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கைரேகை ஜோசியத்தில் கை தேர்ந்தவராக நடித்துள்ளார் பிரபாஸ்.
மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது நிருபர் ஒருவர் அவரிடம் படத்தில் எல்லோருக்கும் கல்யாண விஷயம் குறித்து கை ரேகை பார்த்து சொல்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள், அந்த வகையில் உங்களது திருமணம் எப்போது என்று உங்களால் கூற முடியுமா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பிரபாஸ் காதல் விசயத்தில் எப்போதுமே என்னுடைய கணிப்புகள் தவறாகவே போயிருக்கின்றன. அதனால்தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கலாட்டாவாக பதில் கூற அங்கிருந்த நிருபர்கள் அனைவரும் சிரித்தனர்.