அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
'என்ஜிகே' படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கி வரும் படம் 'நானே வருவேன்'. இதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது அண்ணன் படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். புவனா சுந்தர் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில், தற்போது இயக்குனர் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரானது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.