மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவகன், ஸ்ரேயா, ஒலிவியா மோரிஸ் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படத்தின் பிரிமீயர் காட்சிகள் அமெரிக்காவில் 24ம் தேதியே நடைபெற உள்ளது. அதற்கான முன்பதிவு ஏற்கெனவே ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஒரு புதிய சாதனையையும் படைத்துள்ளது.
பிரிமீயர் காட்சிகளின் வசூலாக முதல் முறையாக ஒரு இந்தியத் திரைப்படம் 8 லட்சம் யுஎஸ் டாலர் தொகை வசூலித்துள்ளது தான் அந்த புதிய சாதனை. அதில் 5 லட்சம் தொகை சினிமார்க் தியேட்டர்கள் மூலம் கிடைத்துள்ளதாம். இதை படத்தை அமெரிக்காவில் வெளியிடும் வினியோக நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரிமீயர் காட்சிகளுக்கான முன்பதிவு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. அதனால், வசூல் தொகை இன்னும் அதிகமாகலாம்.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் வசூல் 'பாகுபலி 2' வசூலை மிஞ்சும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் இருக்கிறது.