ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சென்னை : தியேட்டர்களில் படங்களை திரையிட வசூலிக்கப்படும் வி.பி.எப்., கட்டணம் தொடர்பான பேச்சில் தொடரும் இழுபறியால், பல தியேட்டர்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தியேட்டர்களில் படங்களை திரையிட வசூலிக்கப்படும் வி.பி.எப்., கட்டணம் தொடர்பாக, அரசுத் துறை, தயாரிப்பாளர்கள், டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை வழங்குவோர் இடையே கடந்த வார இறுதியில் முத்தரப்பு பேச்சு நடந்தது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தியேட்டர் உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி முடிவு காண திட்டமிடப்பட்டுள்ளது.
மாற்று வழி
இதுகுறித்து, தயாரிப்பாளர் சங்கத்தினர் கூறியதாவது: தியேட்டரில் விளம்பர வருவாய், கேன்டீன், பார்க்கிங் உள்ளிட்ட பல வகையில் வருமானம் வருகிறது. புரொஜக்டர்களுக்கான கட்டணத்தையும், தியேட்டர் உரிமையாளர்களே செலுத்த வேண்டும். கடந்த 13 ஆண்டுகளாக, ஆண்டுக்கு 125 கோடி ரூபாயை தயாரிப்பாளர்கள் செலுத்தியுள்ளனர். இனி நாங்கள் செலுத்த மாட்டோம் என்றனர்.
தியேட்டர் உரிமையாளர்கள் அண்ணாமலை உள்ளிட்டோர் கூறியதாவது : தமிழகத்தில் உள்ள 1,100 தியேட்டர்களுள், 200 தியேட்டர்களில் சொந்தமாக டிஜிட்டல் புரொஜக்டர்கள் உள்ளன. இந்த தொழில்நுட்பம் வந்தபோது, தயாரிப்பாளர்கள் வாடகை செலுத்துவதாக கூறியதால் தான், நாங்கள் சம்மதித்தோம். இப்போது கூறுவது போல, அன்றே கூறியிருந்தால் மாற்று வழியை யோசித்திருப்போம். நிலத்திற்கான விலை, ஐந்து வகையான வரி, தொழிலாளர்களுக்கான சம்பளம், மின்சார கட்டணம் என படம் திரையிட்டாலும், இல்லாவிட்டாலும் பல வகையிலும் செலவு இருக்கிறது. இதில், கேன்டீன், விளம்பர வருவாயில் தயாரிப்பாளர்களும் பங்கு கேட்டால், தியேட்டர்களை மூடி விட்டு செல்ல வேண்டியது தான்.
வருமானம் இல்லை
தமிழகத்தில் 2,000 ஆக இருந்த தியேட்டர்கள் எண்ணிக்கை இன்று பாதியாகி விட்டது. அதிலும், தற்போது பாதி தியேட்டர்கள் பெருமைக்கு தான் நடக்கின்றன; போதிய வருமானம் இல்லை. தயாரிப்பு செலவை குறைத்தாலே தயாரிப்பாளர்களுக்கான பாரம் பெரிதும் குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.