துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியும் முந்தைய சீசன்களை போலவே மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீசனில் அம்மு அபிராமி, ரோஷ்ணி ஹரிப்பிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா, வித்யுலேகா ராமன், உள்ளிட்ட பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். கோமாளிகள் வரிசையில் சிவாங்கி, புகழ், மணிமேகலை உள்ளிட்ட அனைவரும் ரிட்டர்ன் அடித்து நிகழ்ச்சியை சுவாரசியமாக மாற்றி வருகின்றனர்.
இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஹே சினாமிகா படத்தின்புரோமோஷனுக்காக நடிகர் துல்கர் சல்மான், அதிதி ராவ் என்ட்ரி கொடுத்துள்ளனர். அதன் புரோமோ தற்போது வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. அதில் சிவாங்கி, நடிகர் துல்கர் சல்மானுடன் சேர்ந்து 'ஓ காதல் கண்மணி' படத்தின் ஒரு காதல் காட்சியில் சூப்பராக நடித்து ரொமான்ஸ் செய்திருந்தார். ஏற்கனவே, சிவாங்கி படத்தில் நடித்து வருகிறார். தற்போது துல்கருடன் சேர்ந்து ரொமான்ஸிலும் கலக்கிய சிவாங்கியை பலரும் விரைவில் ஹீரோயினாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.