நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க விஜய் ஆண்டனி விரும்பினார். ஆனால் அதற்கு சசி ஒப்புக் கொள்ளவில்லை. அவர் நூறு கோடி வானவில் என்கிற காதல் கதையை இயக்கச் சென்று விட்டார். இந்த நிலையில் விஜய் ஆண்டனியே பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகத்தை இயக்கத் தொடங்கி விட்டார். இந்த படத்தை அவரது மனைவி பாத்திமா தயாரிக்கிறார்.
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காவ்யா தாப்பர் நடிக்கிறார். தேவ் கில், ஹரிஷ் பெராடி, ஜான் விஜய், ராதா ரவி, மன்சூர் அலி கான், ஒய்.ஜி.மகேந்திரன், ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு விஜய் மில்டன் மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
படத்தின் தீம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சொல்லப்படும் பிச்சைக்காரன் 2 கதை இதுதான்: முதல் பாகத்தில் கோடீஸ்வரரான விஜய் ஆண்டனி தனது தாயை கொடிய நோயில் இருந்து காப்பாற்ற ஜோதிடர்களின் அறிவுறுத்தல்படி 100 நாட்கள் பிச்சைக்காரனாக வாழ்வார். இது செண்டிமென்டும், ஆக்ஷனும் கலந்த கதை.
இரண்டாம் பாகத்தில் ஆக்ஷனை நம்பி களத்தில் இறங்குகிறார் விஜய் ஆண்டனி. முதல்பாகத்தில் பிச்சைக்காரனாக வாழ்ந்தபோது ஏழை எளிய மக்களின் வலிமைய உணர்ந்து கொள்கிறார். இந்த பாகத்தில் பணக்காரனாக இருந்தாலும் பிச்சைக்காரனாக வேடம் அணிந்து மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றும் பணக்காரர்களை எதிர்த்து போராடுகிறார்.
வரலாறு பணக்காரர்களால் எழுதப்படுகிறது, ஏழைகளின் வலி அவர்களுக்கு புரியாது, நீ பண்ணப்போற புண்ணியம் உனக்கு தேவையானதை கொடுக்கும் என்ற தத்துவங்கள் படத்தில் சொல்லப்படுகிறது.