அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
விஷ்ணு விஷால் உடன் இணைந்து மஞ்சிமா மோகன் நடித்த படம் எப் ஐ ஆர். கடந்த மாதம் வெளியான இந்தப் படத்தை மனு ஆனந்த் இயக்கியிருந்தார். இதையடுத்து தனது அடுத்த படத்தை இயக்கும் பணிகளை தொடங்கிவிட்ட அவர், தனது புதிய படத்தில் உதவி இயக்குனராக பணி புரிய விருப்பம் உள்ளவர் தன்னை அணுகலாம் என ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை மஞ்சிமா மோகன் அது குறித்து ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், மனு ஆனந்திடம் உதவி இயக்குனராக சேர விரும்புவர்கள் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியதோடு, நான் ஏற்கனவே அவரிடத்தில் உதவி இயக்குனராக பணிபுரிய விண்ணப்பித்தேன். ஆனால் என்னை அவர் வேண்டாம் என்று கூறிவிட்டார் என்று இந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.
அதையடுத்து மனு ஆனந்த் வெளியிட்ட பதிவில், உங்களது விண்ணப்பத்தை நான் பெறவில்லை. ஒருவேளை ஈமெயிலில் அது தவறி இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். அதனால் மனு ஆனந்தின் புதிய படத்தில் மஞ்சிமா மோகன் உதவி இயக்குனராக வேலை செய்வார் என்று தெரிகிறது.