நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்த 'மாநாடு' படம் கடந்த ஆண்டின் வெற்றிப் படங்களில் முக்கியமான ஒரு படம்.
படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும், நாயகன் சிம்புவின் அப்பா டிஆருக்கும் இடையில் படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்து சர்ச்சை எழுந்தது. அந்த சமயத்தில் படத்தின் சக்சஸ் மீட் அதன்பின் படத்தின் 50வது நாள் விழா ஆகிய நிகழ்வுகளில் சிம்பு கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
படத்தின் 100வது நாளில் தியேட்டருக்குச் சென்று சிம்பு ரசிகர்களுடன் கொண்டாடினார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற 'மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் சௌத்' விருது வழங்கும் விழா ஒன்றில் 'மாநாடு' படத்திற்கு 'சென்சேஷனல் பிளாக்பஸ்டர் ஆப் த இயர்' விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர்கள் சிம்பு, எஸ்ஜே சூர்யா, நடிகை கல்யாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றனர். தயாரிப்பாளரும், நாயகனும் மீண்டும் இணைந்து விருது வாங்கியது திரையுலகத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது.
'மாநாடு' படம் வெற்றி பெற்றதுமே ரசிகர்கள் அதன் 2ம் பாகம் வேண்டும் என்று கேட்டனர். அது நிறைவேறுமா என்பது குறித்து படக்குழுவினர்தான் தெரிவிக்க வேண்டும்.