மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பதவி ஏற்றுக்கொண்டனர். அனைவருக்கும் 97 வயதாகும் நடிகர் சங்கத்தின் மூத்த கலைஞர் மணி அய்யர், மற்றும் 95 வயதாகும் ஊட்டி மணி இருவரும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்கள்.
அப்போது நடிகர் கார்த்தி ‛தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்திற்கு சில அமைப்புகள் மூலம் பிரச்னை வரும்போது சட்டப்படியாக நடிகர் சங்கம் உதவும்' என்றார். அதற்கு முன் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் உள்ளிட்ட செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய நடிகர் நாசர், இந்த வெற்றியின் மூலம் நாங்கள் எடுத்துக்கொண்ட பொறுப்பு மேலும் கூடுதலாகியுள்ளது என தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய விஷால், நடிகர் சங்க தேர்தலுக்கு ஆகும் செலவை கட்டடத்திற்கு பயன்படுத்த நாங்கள் நினைத்தோம். அத்துடன் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் எனவும் முயற்சித்தோம். ஆனால் எதிரணியினர் இதை போட்டியாக பார்த்தனர். தேர்தல் முடிந்து 3 ஆண்டுகள் கழித்து ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவது வேறு எங்கும் நடைபெறவில்லை. இதுதான் முதல் முறை. தற்போது நாங்கள் வெற்றி அடைந்துள்ளோம். திரும்ப திரும்ப நாங்கள் சொல்வது ஒன்று தான். நாடக நடிகர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தான் நாங்கள் எல்லோரும் போராடுகிறோம். அது நல்லபடியாக நடக்கும், என விஷால் தெரிவித்தார்.
ராக் போர்ட் தயாரிப்பாளர் முருகானந்தம் நடிகர் சங்கத்திற்கான கட்டட பணிகளுக்காக ரூ.5 லட்சம் காசோலை நன்கொடை அளித்தார். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ரூ.10 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது. அத்துடன் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அனைவர் முன்பாகவும் கேக் வெட்டி கொண்டாடினார்கள். புதிய நிர்வாகிகளுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சால்வே அணிவித்து மரியாதை செய்தனர்.