ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தென்னிந்திய சினிமாவில் இந்தத் தலைமுறைக்கு பிரம்மாண்ட இயக்குனர் என்று அறியப்பட்டவர் இயக்குனர் ஷங்கர். அவரே வியந்து பாராட்டும் அளவிற்கு தற்போது தெலுங்கு இயக்குனரான ராஜமவுலி பிரம்மாண்ட இயக்குனர் என்ற பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.
ராஜமவுலி இயக்கத்தில் நேற்று வெளியான 'ஆர்ஆர்ஆர்' படம் பார்த்து பல திரையுலகப் பிரபலங்கள் பாராட்டி வருகிறார்கள். படத்தைப் பார்த்த இயக்குனர் ஷங்கர், ராஜமவுலியை 'மகாராஜா'மவுலி எனப் பாராட்டியுள்ளார்.
‛‛பரவசப்படுத்துகிற, குடைகிற, வலுவான படம். காலம் முழுவதும் இதன் கர்ஜனை எதிரொலிக்கும். இணையற்ற அனுபவத்தைத் தந்த மொத்த குழுவினருக்கும் நன்றி. திரையில் ராம் சரணின் பொங்கி எழும் நடிப்பு, உங்கள் இதயத்தைக் கவர்ந்து தாக்குதல் நடத்தும் பீம் ஆக என்டிஆர். உங்கள் கற்பனை தோல்வியடையாமல் இருக்கும், தலை வணங்குகிறேன் மகாராஜாமவுலி'' எனப் பெரிதும் பாராட்டியுள்ளார்.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் நாயகன் ராம் சரண் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கி வருவது ஷங்கர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.