மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அவரது 41ஆவது படமான இந்தப் படம் மீனவர் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறது. நேற்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் தெலுங்கு நடிகை கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து தற்போது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக மமிதா பைஜு என்ற மலையாள நடிகை நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த ஜனவரி மாதம் மலையாளத்தில் வெளியான சூப்பர் சரண்யா இந்த படத்தில் சோனா என்ற கேரக்டரில் மிக சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கும் மமிதா பைஜூவுக்கு ஒரு வித்தியாசமான வேடம் கொடுத்துள்ளாராம் பாலா.