மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ஒரு படம் வெளியாகி குறைந்த பட்சம் 30 நாட்கள் கழித்துத்தான் அந்த படத்தை ஓடிடிக்கு கொடுக்க வேண்டுமென வினியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்பந்தம் போடுவது பழக்கம். ஆனால் கொரோனா தாக்கம் கடந்த இரண்டு வருடங்களாக அனைத்து நடைமுறைகளையும் புரட்டிப் போட்டு விட்டது.
அந்தவகையில் திரையரங்குகள் மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்ததால் பல தயாரிப்பாளர்கள் தங்களது படத்தை ஓடிடி தளங்களில் நேரடியாகவே வெளியிட்டனர். ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களுடன் மோதுவதைவிட அந்த படத்தில் நடித்த சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர். அவர்களது அடுத்த படம் தியேட்டரில் வெளியாகும் போது ஒத்துழைப்பு கொடுக்க கூடாது என தீர்மானம் இயற்றும் அளவிற்கு செல்கின்றனர்.
அந்த வகையில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சல்யூட் என்கிற படம் நேரடியாகவே ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தை துல்கர் சல்மானே தயாரித்தும் இருந்தார். இதைத்தொடர்ந்து இனி துல்கர் சல்மான் படங்களை தியேட்டர்களில் வெளியிடுவதற்கு ஒத்துழைப்பதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது மேலும் மார்ச் 31 (நேற்று) நடைபெறும் பொதுக்குழுவில் இதுபற்றி விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் நேற்று கூடிய பொதுக்குழுவில் துல்கர் சல்மான் சார்பாக இந்தப்படத்தை எதனால் ஓடிடியில் வெளியிட நேர்ந்தது என்பது குறித்து திருப்திகரமான விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் அதனால் அவர் மீது விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.