ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இயக்குனர் ராஜமவுலியின் டைரக்சனில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பாகுபலி படத்தில் கட்டப்பா சிவகாமி, காளகேயன் என பல கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய நட்சத்திரங்களை தாண்டி பெரிய அளவில் யாரும் ரசிகர்களின் கவனத்தில் பதியவில்லை.
அப்படி பதிந்தவர்களில் முக்கியமானவர் இந்தப் படத்தின் கதையின் அடிநாதமாக விளங்கிய ஆதிவாசி சிறுமி மல்லி தான். பலரும் இந்த சிறுமி ஆந்திரா அல்லது தெலுங்கானாவைய சேர்ந்தவர் என்று நினைத்துக் கொண்டிருக்க இவரை சண்டிகரில் இருந்து அழைத்து வந்து நடிக்க வைத்துள்ளார் ராஜமவுலி என்கிற விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
டுவிங்கிள் சர்மா என்கிற இந்த சிறுமி டான்ஸ் இந்தியா டான்ஸ் என்கிற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றவர். அதுமட்டுமல்ல ஒரு சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். இதை எதேச்சையாக பார்த்த ராஜமவுலி சண்டிகரில் இருந்து அவரை விமானத்தில் வரவழைத்து ஆடிசன் வைத்து இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தாராம். இந்த படத்தில் நடிக்கும்போது எட்டாம் வகுப்பு படித்து வந்த இந்த மல்லி தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.