சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்திலும் ரவுண்டு கட்டி கலக்கி வருபவர் நடிகர் ப்ருத்விராஜ் என்கிற பப்லு. இவருக்கும் நடிகர் சிலம்பரசன் குடும்பத்திற்கும் நெருங்கிய நட்பு உண்டு. ஆனால், சில வருடங்களுக்கு முன் 'ஜோடி நம்பர் ஒன் சீசன் 2' நிகழ்ச்சியின் போது போட்டியாளராக இருந்த பப்லுவுக்கும், நடுவராக இருந்த சிம்புவுக்கு இடையே முட்டிக்கொண்டது. அன்றைய காலக்கட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட சினிமா நட்சத்திரங்களின் சண்டையில் இதுவும் ஒன்று. அப்போதே சிம்புவின் ரசிகர்கள் பலர் பப்லுவை கோபத்தில் திட்டித்தீர்த்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் பப்லு அளித்த பேட்டி ஒன்றில் மீண்டும் சிம்புவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதில் அவர், 'சிம்பு நான் தூக்கி வளர்த்த பையன். நான் என்ன சொன்னாலும் கேட்பார். ஆனால் வாய் தான் கொஞ்சம் அதிகம்' என கூறியுள்ளார். இதை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் பப்லு மீது கடும் கோபத்தில் உள்ளனர். சோஷியல் மீடியாக்களில் பப்லுவுக்கு எதிராக கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.