சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ் சினிமாவில் பிஸியாக இசையமைத்து வரும் அணிருத் சமீபகாலமாக தெலுங்கில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜிவி.பிரகாஷின் கவனமும் தெலுங்கு சினிமா பக்கம் திருப்பி இருக்கிறது. தற்போது அவர் தெலுங்கில் டைகர் நாகேஸ்வரராவ் இயக்கும் புதிய படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப்படத்தில் ரவிதேஜா நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக காயத்ரி பரத்வாஜ் நடிக்கிறார். இந்தப்படத்தின் பூஜை நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற போது அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சிரஞ்சீவி, ரவிதேஜா, ஜிவி.பிரகாஷ் உட்பட அனைவரையும் வாழ்த்தி இருக்கிறார். அது குறித்த வீடியோவை ஜிவி .பிரகாஷ் தனது சோசியல் மீடியாவில் பதிவு செய்து சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.