சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்க, நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள 'பீஸ்ட்' படம் அடுத்த வாரம் ஏப்ரல் 13ம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதன் ஹிந்தி டிரைலர் நேற்று வெளியானது. அந்த டிரைலரைப் பகிர்ந்து தன்னுடைய பாராட்டுக்களை பதிவிட்டுள்ளார் பாலிவுட் நடிகரான ஷாரூக்கான்.
“அட்லியுடன் அமர்ந்திருக்கிறேன், அவர் எந்த அளவிற்கு விஜய்யின் பெரிய ரசிகரோ அதே அளவிற்கு நானும் ரசிகர் தான். பீஸ்ட் குழுவிற்கு பெஸ்ட் ஆக அமைய வாழ்த்துகள். டிரைலர் மீனர்…லீனர்... ஸ்ட்ராங்கர்…ஆக உள்ளது,” எனப் பாராட்டியுள்ளார்.
விஜய் பட டிரைலரைப் பாராட்டியதோடு, தானும் விஜய் ரசிகர் தான் என ஷாரூக் பதிவிட்டுள்ளதை விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்து, லைக் செய்து, கொண்டாடி வருகிறார்கள்.