சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சென்னை : நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்திற்கு குவைத் அரசு தடை விதித்துள்ள நிலையில் தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள, 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ம் தேதி வெளியாக உள்ளது. முஸ்லிம்களை பயங்கரவாதி களாக சித்தரித்துள்ளதாகக் கூறி, இப்படத்திற்கு குவைத் நாட்டின் அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்திலும் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, தமிழக உள்துறை செயலர் பிரபாகருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: தங்கள் ஜாதி அடையாளம் மற்றும் ஜாதி தலைவர்களின் பெயர்கள் திரைப்படத்தில் இடம் பெற்றால், அதற்கு சமுதாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. முஸ்லிம்கள் மட்டும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாசாரத்தில் ஈடுபட்டு, நாட்டின் அமைதிக்கு எதிராக செயல்படுவது போல, தொடர்ந்து திரைப்படங்களில் காட்சிகள் இடம் பெறுவது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயம்.
கடந்த 2015 வெள்ளத்தின்போதும், கொரோனா பேரிடரின்போதும், முஸ்லிம் அமைப்புகள் செய்த பணிகளை, யாரும் மறந்து விட முடியாது. தற்போது முஸ்லிம்கள், ரம்ஜான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்த சூழலில், முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ள, 'பீஸ்ட்' திரைப்படம் வெளிவந்தால், முஸ்லிம்கள் இடையே அசாதாரண சூழல் ஏற்படும். எனவே, இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு முஸ்தபா தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் புகார்
சென்னை, செம்பியத்தைச் சேர்ந்தவர் தேவராஜன்; சமூக ஆர்வலர். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்: நடிகர் விஜய் நடித்துள்ள, பீஸ்ட் படம், வரும் 13ம் தேதி வெளியாக உள்ளது. தியேட்டர் உரிமையாளர்கள் இப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளனர். அத்துடன், சட்ட விரோதமாக ஆறு காட்சிகள் திரையிடவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. அதேபோல, 'பார்க்கிங்' கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தி வசூலிக்க உள்ளனர். இதை சட்ட ரீதியாக தடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.